தண்ணீரை ஹைட்ரஜன் ஆக்ஸிஜனாக பிரிக்கும் செல்கள்

செல்கள் என்றால் உயிர் செல்கள் அல்ல. பாக்டீரியா அல்ல.
இது எலக்ட்ரானிக்ஸ் செல். போட்டோ கேடலிடிக் செல்.

போட்டோ கேலடிக் செல் ஒன்றை வாஷிங்டன் யூனிவர்ஸிட்டி விஞ்ஞானிகள் தயாரித்துள்ளார்கள்.

இந்த செல் சூரிய ஒளியை உறிஞ்சிக்கொண்டு அதன் சக்தி மூலம் தண்ணீரை ஹைட்ரஜனாகவும் ஆக்ஸிஜனாகவும் பிரிக்கிறது.

இது வெகுவிரைவில் வியாபார ரீதியில் விற்பனைக்கு வந்து மிகக்குறைந்த செலவில் ஹைட்ரஜன் உருவாக்கும் தொழிலாக மாறலாம்.

மேலும் விபரங்களுக்கு
http://www.scienceblog.com/cms/cell-splits-water-sunlight-produce-hydrogen-13144.html

பெங்குவின்களின் மிக ஆழமான டைவ்




ஒரு மனிதன் தண்ணீரின் ஆழத்தில் செல்வதை விட 5 மடங்கு அதிக ஆழத்துக்கு பெங்குவின்கள் செல்கின்றன.
அவைகளால் தண்ணீருக்கும் 20 நிமிடங்கள் இருக்க முடிகிறது.
இவைகள் எப்படி இவ்வளவு நேரம் தண்ணீருக்கும் இருக்கமுடிகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்
இந்த பறவைகள் சுமார் 1800 அடி ஆழத்துக்கு உதவியின்றி செல்ல முடிகிறது என்பதை கருவிகள் மூலம் அறிந்திருக்கிறார்கள்

இவைகள் கடும் குளிரில் தங்களது வாழ்விடங்களிலிருந்து சுமார் 100 மைல்கள் பிரயாணம் செய்து உணவைத்தேடுகின்றன.
இவைகள் எப்படி இவ்வாறு கடும் சூழ்நிலையை தாங்குகின்றன என்பதை ஆராய்ந்து அதன் பயனை மக்களுக்கு அளிக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்

http://www.livescience.com/animalworld/061201_penguin_dive.html

பெங்குவின் கால்கள் ஏன் பனியில் உறைவதில்லை?

பெங்குவினின் உடல் முழுவதும் இருக்கும் இறக்கைகள் (ஆமாம் பெங்குவின் பறவைகள்) பெங்குவினை கதகதப்பாக வைத்திருக்கின்றன. அவற்றின் தோலுக்கு கீழே ஒரு கெட்டியான கொழுப்பு கதகதப்பை உறுதிப்படுத்துகிறது. இறக்கைகளும் கொழுப்பும் பெங்குவினை கதகதப்பாக வைத்திருக்கும். ஆகையால், வெய்யலில் ஒரு பெங்குவின் அக்கறையில்லாமல் இருந்தால் ஓவர் சூடாகி விடும்.

பெங்குவினின் மூக்கும் கால்களும் வெப்பதத்தை வெளியிட உதவுகின்றன. அதனால், ஒரு சரியான தட்பவெப்பத்தை பெங்குவின் உடல் வைத்துக்கொள்ள உதவுகின்றன.

காலின் வெப்பத்தை பொறுத்து ரத்த ஓட்டமும் அதிகரிக்கிறது அல்லது குறைகிறது. இது காலின் வெப்ப அளவை உயர்த்தி உறைவதிலிருந்து காப்பாற்றுகிறது.

http://www.livescience.com/mysteries/061121_penguin_feet.html

ஹெச்-ஐ-வியோடு குழந்தைகள்



ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான குழந்தைகள் ஹெச்-ஐ-வியோடு பிறக்கின்றன
இந்த குழந்தைகளின் தாய்மார்கள் ஹெச்-ஐ-வி பாதிப்புடன் இருப்பதால், தங்களது நோயை தங்கள் குழந்தைகளுக்கும் கொடுத்துவிடுகின்றனர்.

இந்த குழந்தைகள் தங்களது 2 ஆவது வயதுக்கு முன்னரே இறந்துவிடுகின்றன.

பெரும்பாலும் இத்தகைய குழந்தைகள் இறப்பது தகுந்த மருந்துகளும், அறியாமையும் இருப்பதனாலேயே.


ஜாம்பியாவில் ஐந்தில் ஒருவருக்கு இந்த நோய் தாக்கியிருக்கிறது. உடலுறவுக்கு அடுத்து இது போன்று தாய்மூலம் குழந்தைகளுக்கு நோய் வருவதே மிகவும் அதிகமாக பாதிப்பு பெற காரணமாக இருக்கிறது.

குழநதைகளின் நோய்தடுப்பு சக்தி வளரும் பருவத்தில் இருப்பதால், பெரியவர்களை விட இந்த குழந்தைகளுக்கு மிக எளிதில் தாக்குதல் நிகழ்ந்து இவர்கள் இறப்பதும் அதிகரித்துவிடுகிறது

மேலும் தகவல்களுக்கு

நன்றி

http://www.alertnet.org/thefacts/reliefresources/116499710922.htm

வாசனை ரகசியம்

சந்தனம், மல்லிகையின் நறுமணங்களும், மசாலாப் பொடிகளின் குறுகுறுப்பான வாசனையும், பிணம், மலம் போன்றவற்றின் துர்நாற்றமும் அவற்றிலிருந்து ஆவியாகி காற்றில் கலக்கும் மூலக்கூறுகளால் தான் ஏற்படுகின்றன. ஊதுபத்தி புகையும்போது புகையுடன் காற்றில் வாசனை மூலக்கூறுகள் கலக்கின்றன. மனித மூக்கில் "சிலேட்டும' படலத்தில் "ஆல்பாக்டிரி ரிசப்டார்' என்ற ஆயிரக்கணக்கான வகை புரதங்கள் படர்ந்துள்ளன. ஒவ்வொரு வகை வாசனை மூலக்கூறுக்கும் அதற்கான தனி ஆல்பாக்டரி ரிசப்டார் புரதம் உள்ளது. இதன் மீது வாசனை மூலக்கூறு பட்டதும் துப்பாக்கி வெடிப்பது போல் தன் தொடர்புடைய நரம்பு செல்லைத் துõண்டி விடுகிறது. இந்தத் துõண்டல் மூளையை அடைந்ததும் குறிப்பிட்ட நரம்பு சுற்று கிளர்ந்தெழுந்து வாசனை உணர்வு ஏற்படுகிறது. நாய்களுக்கு 5 ஆயிரம் வகை ரிசப்டார் புரதங்கள் உள்ளன.

மனிதனுக்கு அதை விட மிக்குறைவான வகை ரிசப்டார் புரதங்களே உள்ளன.

ஏன் ஒரு சில வாசனை நம்மை மூக்கை சுளிக்கவும், ஒரு சில வாசனை ஆழ்ந்து நுகரவும் வைக்கிறது?

நாம் சாப்பிடக்கூடிய பொருளிலிருந்து வரும் வாசனையை நல்லது என்றும், நாம் சாப்பிடக்கூடாத பொருளிலிருந்து வரும் வாசனை வேதிப்பொருளை கெட்டது என்றும் நாம் பலகோடி வருட பரிணாமத்தின் காரணமாக பெற்றிருக்கிறோம்.

நாம் வளரும் சூழ்நிலை காரணமாகவும் இந்த வாசனை அறிவு நமக்கு உருவாகிறது. கருவாடு சிலருக்கு மணமாகவும் சிலருக்கு அருவருப்பாகவும் இருக்கலாம்.

ஆனால், ஒரு ஆட்டுக்கறி தீயில் வறுபடும் வாசனை ஒருவர் சைவ குடும்பத்திலிருந்து வந்திருக்கிறாரா அசைவ குடுமத்திலிருந்து வந்திருக்கிறாரா என்பதை கடந்து அது வாசனையாகவே உணரப்படுவதை அறிவியலாளர்கள் பரிசோதித்து உணர்ந்திருக்கிறார்கள்.

அது கறி வறுபடும் வாசனை என்று சொன்னதன் பிறகே சைவ குடும்பத்திலிருந்து வந்தவர்கள் அருவருத்தார்கள்.

இதனால், மனிதனின் பரிணாமத்தின் ஆரம்பத்தில் அவன் கறியை சுட்டு சாப்பிடும் பழக்கம் கொண்டவனாக இருந்திருக்கிறான் என்பதை அறிந்திருக்கிறார்கள்.

தன்னைத் தானறியும் யானை

கண்ணாடி முன் யானை

பெரும்பாலான விலங்கினங்கள் கண்ணாடியின் முன் நிற்கவைத்தால் எதிரே தெரியும் பிம்பம் வேறு ஒரு விலங்கு என்றே எண்ணுகின்றன. அதற்கு ஏற்றவாறே அவற்றின் நடவடிக்கைகளும் அமைகின்றன. ஆனால் இந்த ஹாப்பி யானை கண்ணாடியின் முன் நிற்கும்போது, எதிரில் தெரியும் பிம்பம் தான் என்பதை உணர்ந்து, பொதுவாக மற்ற யானைகளைக் கண்டால் செய்யும் சில குழும செயல்பாடுகளைச் செய்யாமல் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதாவது தான் யார் என்பது யானைகளால் உணர்ந்துகொள்ளமுடியும். தான் யார் தனக்கு அருகில் நிற்பது யார் தான் என்பதற்கும் பிறர் என்பதற்குமான வேறுபாடு என்ன இவற்றை பகுத்து அறியும் திறன் யானைகளுக்கு உண்டு என்பது தெளிவாகியுள்ளது.

இந்த ஹாப்பி என்ற யானை மற்றவற்றிலிருந்து தன்னை வேறுபடுத்தி உணர்ந்து கொண்டுள்ளமையால், சுய விழிப்புணர்வு என்பது பொதுவில் மனிதர்களிடமும், சிம்பன்ஸி குரங்குகளிடமும், குறிப்பிட்ட அளவில் டால்பின்களிடமும் காணப்படுகிற அம்சமாகும். தன்னை அறிந்துகொள்ளும் தன்மையில் யானைகளின் சமூக அல்லது குழும நடவடிக்கைகளின் குழப்பமான அமைப்பு ஒருவேளை அமைந்திருக்கலாம் அல்லது அவற்றின் பிறர் நலம் நாடும் தன்மை மற்றும் பிறர் துயரை தானே அடைந்ததாக உணரும் தன்மை ஆகியவற்றோடு இந்த தன்னை அறிந்துகொள்ளும் தன்மைக்கு தொடர்பிருக்கலாம் என்கிறார் இந்த ஹாப்பி யானை உள்ள பிராங்க்ஸ் விலங்கியல் பூங்காவை நிர்வகிக்கும் வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பின் ஆய்வாளரான டயானா ரெய்ஸ் கூறுகிறார்.

சென்ற வருடம் ஒரு ஆப்பிரிக்கக் காட்டில் மான்களை அடைத்து வைத்திருந்த ஒரு கொட்டடியில் யானைகள் புகுந்து அந்த மான்களை விடுதலை செய்தன. யானைகளுக்கு மற்ற உயிரினங்களைப் பற்றிய உணர்வும், அந்த உயிரினங்கள் காட்டின் வளத்துக்கு எவ்வளவு முக்கியமானவை என்ற உணர்வும் உண்டு என்பதையே இது குறிப்பதாக பலரும் கருதுகிறார்கள்

விட்டமின் D

விட்டமின் D ஐ மனித உடலில் உருவாக்கும் சூரிய ஒளி


சூரிய ஒளியின் புறஊதாக்கதிரில் வைட்டமின் "டி' அடங்கியிருப்பதாகச் சொல்லிக் கொடுத்துவிடுகின்றனர். சூரிய ஒளியில் புறஊதாக்கதிர் இருப்பதென்னவோ உண்மை தான். ஆனால் அதில் வைட்டமின் "டி' இருப்பதென்பது தவறு.

நமது உடலில் "7டி ஹைட்ரோ கொலஸ்ட்ரால்' என்று ஒரு கொழுப்புப் பொருள் உள்ளது. இது சூரிய ஒளியில் உள்ள புற ஊதாக்கதிரால் "பிரீ' விட்டமினாகமாற பின் அது "ஐலோமெரைசேஷன்' என்ற தன்வினையால் விட்டமின் டி யாக மாறுகிறது. விட்டமின் டி யின் கெமிக்கல் பெயர் "கோலி கேல்ஸி பெரால்' ஆகும்.

சூரிய ஒளி நம் உடலில் விட்டமின் டி உண்டாக ஒரு தூண்டுதலாக மட்டுமே செயல்படுகிறது. இருட்டிலேயே வாழ்பவர்கள் மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிடுவதன் மூலம் விட்டமின் "டி' யைப் பெறலாம்.

வெளிநாடுகளில் பாலை டப்பாக்களில் அடைக்கும்போது விட்டமின் டிஐயும் சேர்த்து அடைக்கிறார்கள். ஏனெனில், குளிர்கால காலம் அதிகமுள்ள நாடுகளில் யாரும் வெளியே வருவதில்லை. அதனால், அவர்களுக்கு விட்டமின் டி பற்றாக்குறை ஆகிறது. இதனால், விட்டமின் டிஐ பாலோடு சேர்த்து தருகிறார்கள்.

அவ்வாறு விட்டமின் டியை பாலோடு சேர்த்து சாப்பிடுவதை விட மிகவும் அதிகமாக மனித உடல் சற்று நேரம் வெயிலில் இருப்பதன் மூலம் தயாரித்துக்கொள்கிறது.

மேற்குலகில் பலரும் கோடைக்காலங்களில் சன் பாத் எடுக்கும் கலாச்சாரம் இந்த தேவையினாலேயே வந்தது என்றும் பலர் கூறுகிறார்கள்.

விட்டமின் டி இல்லையென்றால், ரிக்கெட் என்னும் வியாதி வருகிறது. இது எலும்பு வலுவிழந்து வளைந்த கால்களை உருவாக்கும்.